திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]
