கோவிலூரில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்ததால் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் பழுதடைந்த கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடத்தை கட்டி தர கோரியும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டமானது கோவிலூர் கிளை செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
