கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]
