கோவிலில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் செம்மங்குடி பகுதியில் வசிக்கும் ஞானஸ்கந்தன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது சங்கிலி கருப்பசாமி கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அலுவலரான ராஜேஷ் […]
