கோவிலின் உண்டியலில் இருந்த பணத்தை திருட்டி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா அபிமன்னன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 14 – ஆம் தேதியன்று கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
