Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது. அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று […]
