செப்டம்பர் முதல் கோவோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீரம் இந்தியா தலைமைச் செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது/ மூன்றாவதாக கோவாவாக்ஸ் என்ற பெயரில் புதிய தடுப்பூசி இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு தயார் படுத்தப்பட்டு உள்ளது. […]
