கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நேற்று புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின் விமானத்தின் சரக்கு கிடங்கு ஒன்றில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய டி.சி.ஜி.ஏ உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பயணி ஒருவர் “துபாயிலிருந்து […]
