கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]
