ஐஏஎஸ் அதிகாரி காரின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு கோயம்பேடு 100 அடி (30 மீ) உள்வட்ட சாலையில் (ஜவஹர்லால் நேரு சாலை) SAF கேம்ஸ் கிராமத்திற்கும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் இடையே அமைந்துள்ள சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். […]
