பெண் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் துரை என்பவர் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த அங்காடி குழு கருவேப்பிலை வியாபாரம் செய்வதற்காக ஏ ரோட்டில் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். ஆனால் துரை சாலையோரத்தில் இருந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து மற்ற வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் துரை அதற்கு மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
