Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “மேலும் மேலும் குறையும் தக்காளி விலை”…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது.  சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத…. வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை – ககன்தீப் சிங் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், “இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: ஞாயிறு அன்று – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தை இன்று செயல்படும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி வாரங்களில் ஒருநாள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு …!!

கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பொது மக்கள் வருவதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு முறை விடுமுறை விட வேண்டும் என சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தையை சுற்றியுள்ள சில குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் காய்களை வாங்க காய்கறிகளை வாங்க குவிந்து வருவதால் இனி வரும் அனைத்து விடுமுறை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடியது …!!

சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு குறு சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லங்கள் அலுவலகங்களில் மலர்கள், பழம் வகைகள், வாழை கன்று,  மாவிலைத் தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]

Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும்”…3 நாட்கள் கடையடைப்பு… போராட்டத்தில் வணிக சங்கத்தினர்…!!

கோயம்பேடு சந்தைகளை திறக்க கோரி மூன்று நாட்கள் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை நான்கு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு திருமழிசை தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டு நடந்து வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறந்து வைக்க வலியுறுத்தி வந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோயிலில் கோயம்பேடு சந்தையைத் திறக்க கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தி வந்தனர். அதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் ஆகஸ்ட் 10 முதல் அதிரடி முடிவு – அரசுக்கு எச்சரிக்கை …!!

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட் கடை திறக்க கோரி வியாபாரிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10 தேதி வரும் திங்கட்கிழமை காய்கறி மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுககுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சென்னை கோயம்பேடு அனைத்து கூட்டமைப்பு, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட், நவதானிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் 3000 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பூ, பழம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேரு மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. சென்னை உட்பட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு – நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 2000 கணக்கானோருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது. […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இன்று கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்: முதல்வர் விளக்கம்!

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு: கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம்.. வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை: முதல்வர்

கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ” ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கிண்டியில் 8 பேருக்கும், கோயம்பேட்டில் 8 பேருக்கும் இன்று கொரோனா உறுதி!!

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த அண்ணன், தம்பிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளான அண்ணன், தம்பிகள் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்துள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கோயம்பேடு பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ்!

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரியலூரில் 275 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயன்பாட்டிற்கு வந்த திருமழிசை தற்காலிக சந்தை….. சென்னையில் காய்கறிகள் விலை குறைந்தது!

திருமழிசை தற்காலிக சந்தை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சுமார் 2,000 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளது – முழு விவரம்!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 1,867 பேர் என மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

திருமழிசையில் நாளை முதல் தற்காலிக சந்தை – வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்கும் பணிகள் தீவிரம்!

நாளை முதல் திருமழிசை தற்காலிக சந்தை செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சுமார் 2,000 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் பழனிசாமி ஆய்வு!

சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு  செய்து வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு இடமாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி!

விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 4,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 159 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 371 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கோயம்பேடு சந்தையில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 68 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள் என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் – கமலஹாசன் ட்வீட்!

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 160ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,922 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 135 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 121 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – கோயம்பேடு சந்தை மூலமாக தமிழகம் முழுவதும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவர், அதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மே 1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது.  இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் 30ம் தேதி மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு!

கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையை மூன்று பகுதிகளுக்கு பிரித்து மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகள்!

கோயம்பேடு சந்தையில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு மார்க்கெட் மூடல் – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு ….!!

22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்  செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் 22ஆம் தேதி கோயம்பேட்டில் இருக்கக்கூடிய எந்த கடையும் செயல்படாது என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களை அறிவித்திருந்தார். மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவேண்டும். வெளியில் யாரும் வரக்கூடாது. 22ஆம் தேதி அனைவரும் வீடுகளிலே இருக்க வேண்டுமென பல்வேறு உத்தவரை சொல்லி இருந்த […]

Categories

Tech |