Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டால் வந்த தகராறு… இருதரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

49,50,000 ரூபாய் கடன்…. மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியை…. கைது செய்த போலீஸ்….!!

49,50,000 ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த பள்ளித் தலைமை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொங்கேகவுண்டன்புதூர் பகுதியில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியைராக மாலதி பணிபுரிந்து வருகின்றார். இவர் கார்த்திக் குமார் என்பவரிடம் மகளின் திருமணத்திற்காகவும், மகனின் உயர் கல்வி செலவிற்காகவும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதேபோல் தலைமையாசிரியை மேலும் 6 நபரிடம் கடன் வாங்கி மொத்தம் 49½ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் இதை செய்யல… அதனால நாங்களே செஞ்சுக்குறோம்… பொதுமக்களின் சிறப்பான செயல்…!!

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலைக்கு செல்லும் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடும். இதனால் அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்தும் பணியை செய்துள்ளனர். இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வளைவான பகுதி, முக்கிய சாலைகள், சந்திப்பு என அறிந்து கொள்ள வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் வேகத்தடையின் மீது பூசபடவில்லை. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் வேகத்தடையில் ஏறி இறங்கிய […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். ஜனதா கட்சி  ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் கார்த்திக். சிங்காநல்லூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,23,614 ஆகும். சிறு குறு தொழில்களுக்கான நவீன தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் கஸ்தூரி வாசு. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,05,335 ஆகும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதும் தோட்ட தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வால்பாறையை […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,777 ஆகும். பொள்ளாச்சியில் தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். இளநீருக்கு 25 ரூபாயும், தேங்காய்க்கு 30 ரூபாயும் ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பொள்ளாச்சி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இரு முறை வென்றுள்ளது. அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவினர் ஓ.கே. சின்னராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,95,802 ஆகும். கருவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையும், கருவேப்பிலையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இந்த அங்கீகாரம் வேண்டும்… இது தான் எங்கள் நோக்கம்… டாக்டர். கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி…!!!

பட்டியில் இன பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பெயரை நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த டாக்டர். கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சி சார்பில் பட்டியலில் உள்ள 6 பிரிவு வகுப்புகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பதற்காக பல்வேறு சட்டப்பேரவைகளில் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பல போராட்டங்களையும் செய்து வருகிறோம் என கூறியுள்ளார். இதனை ஆய்வு செய்த மாநில உயர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் இளைஞர்கள்” அதிகாரியிடம் தகராறு… பைக் தீவைத்து எரிப்பு…. 3 பேர் கைது….!!

மூன்று வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. கோவை  கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்.  இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தமிழரசன், உண்ணி என்ற பிரவீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ வைத்து எரித்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம்” பறிபோன பணம்…. வங்கி ஊழியரின் முடிவு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பராயன் கோவில் அருகில் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரவி இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருடைய மகன் மதன்குமார் இவர் கவுண்டம்-பாளையத்தில்  உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பழைய இரும்பு சந்தையில் தீ விபத்து …!!

மேட்டுப்பாளையத்தில் பழைய இரும்பு கடைகள் செயல்பட்டு வரும் சந்தையில் அதிகாலையில்  ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கடைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன.  மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சங்கர் நகரில் உள்ள பழைய இரும்பு சந்தையில் 200-க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பயன்பாடு முடிந்த காருகள் லாரிகள் இங்கு கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும். இந்த சந்தையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சந்தையின் மையப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவியதில் 8 கடைகள் முழுவதும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 மணி நேரம் கால்களில் சலங்கை அணிந்து உலக சாதனை …!!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ் தனது கால்களில் சலங்கை அணிந்தபடி பறை பெரியமேளம் மற்றும் துடும்பு நையாண்டி ஆகிய கிராமிய இசைக்கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார். மாணவர் விமல்ராஜின் இந்த சாதனை நோடல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |