தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]
