வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து […]
