இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அனை உள்ளதாலும் கடந்த 40 ஆண்டுகளாக அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. இதனால் குட்டி கோடம்பாக்கம் என்றும் கோபிசெட்டிபாளையம் அழைக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் 1952 இல் முதன்முதலாக சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 6 […]
