இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மாலத்தீவு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தஞ்சம் அடைந்திருந்த அவர் 51 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை திரும்பியுள்ளார். முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவுக்கு இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த பங்களாவில் அவர் தங்கி இருக்கின்றார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் […]
