கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் யாரும் பேசாத காரணத்தால் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவேதலா கிராமத்தை சேர்ந்த நரசய்யா என்பவர் ஆகஸ்ட் 16-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நரசய்யா குடும்ப உறுப்பினர்களிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசய்யா மனைவி சுனிதா (50), மகன் பணிகுமார் (25) அவரது மகள் லட்சுமி […]
