இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி, ராணுவ ஹெலிகாப்டரில் மாலத்தீவிற்கு சென்று, அதன் பின்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக நாடாளுமன்ற பேச்சாளரான பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். […]
