தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கோடை வெப்பம் சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. வருடந்தோறும் கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதனை சபித்துக்கொண்டு மட்டும் கடந்து செல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதால் மட்டும்தான் […]
