Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோடை மழை” பூத்துக்குலுங்கும் காபி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

காபி செடிகள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள செம்மனாரை, கரிக்கயூர், குஞ்சப்பனை, கீழ்தட்டபள்ளம், அரவேனு போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காபி செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். இங்கு ரொபஸ்டா மற்றும் அரபிக்கா என்ற 2 விதமான செடிகள் பயிரிடப்படுகிறது. இந்த செடிகளில் ஆண்டுக்கு 2 முறை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. அதிகபட்ச அளவு பதிவு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக 222 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓரிரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதன்படி புதுசத்திரத்தில் 63 மி.மீ, மங்களபுரத்தில் 45 மி.மீ., சேந்தமங்கலத்தில் 25மி.மீ, திருச்செங்கோட்டில் 22 மி.மீ, ராசிபுரத்தில் 20 மி.மீ, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோடை வெயிலில் பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இங்கு பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் முதலில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. கோடை மழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்…. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில்  திடீரென கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் வெப்ப சலனத்தால் இரவு தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100.4 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வகைகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… அரை மணி நேரம் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

குன்னம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு கடந்த 11-ஆம் தேதி 98.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. மேலும் வெயில் பகல் நேரத்தில் வாட்டி வதைத்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மாலையில் கோடை மழை திடீரென பெய்தது. சுமார் அரை மணி நேரமாக காற்றுடன் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். குன்னம் பகுதியில் […]

Categories

Tech |