மோசடிக்கு காரணமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கும்பல் எம்பிஎப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் அந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தனர். ஆனால் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் செயலியை செயலிழக்கச் செய்துவிட்டு தப்பித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். […]
