தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிசிடிவியில் கோகுல்ராஜூடன் இருப்பது சுவாதி தான் என்று சரியாக தெரிந்தது. ஆனாலும் அவர் அது நான் இல்லை என கூறினார். இதனால், தவறான தகவலை அளித்தல், உண்மையை மறைத்தல் உள்ளிட்டவை அடிப்படையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
