கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தற்பொழுது பிறழ் சாட்சியாக மாறி இருக்கக்கூடிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கிறார். கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோகுல்ராஜ் என்னுடன் கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் பயின்றார். சக மாணவர்களைப் போல தான் கோகுல்ராஜ் தெரியும். […]
