வழிப்பறி, கொலைமிரட்டலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கார்பெட் பகுதியில் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ராஜசேகர் மது குடித்துவிட்டு போதையில் அதே பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் சேட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு […]
