ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் பிரகாஷ் குமார் படத் தயாரிப்பாளர் ஆவார். இந்த தமபதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பக்னன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகிஷ்ரேகா எனும் இடத்தில் காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். இதையடுத்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ரியாகுமாரியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். […]
