கோவிலுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற சுப்ரமணியன் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்பு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
