சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]
