மனைவி கொலை வழக்கில் கைதான கணவரை காவல்துறையினர் சிறையில் அடைக்க வந்தபோது அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரி பாளையத்தில் ரூபா-கார்த்திக் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா தன் பெற்றோர் […]
