Categories
மாநில செய்திகள்

BREAKING: ம.ஜ.க. நிர்வாகி கொலை விவகாரம்…. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!!!!

வாணியம்பாடி மஜக நிர்வாகி நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாததால் மஜக நிர்வாகி கொலை என புகார் எழுந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நிர்வாகியின் உறவினர்கள் போராட்டத்தை அடுத்து எஸ்.ஐ. கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஜிபி பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் காட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி  இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் கூலி வேலை செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மதுவினால் வந்த தகராறு…. சரமாரியாக குத்திய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சண்முக நகரில் வீரண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயது குழந்தையும் இருக்கின்றனர். இதில் கோவிந்தராஜ் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஜெயக்குமார் என்பவரும் வேலுநகர் பகுதியில் உள்ள டாஸ்மார்க்கிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான இருவரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? தொழிலாளிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மண்பாண்ட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டர் வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மண்பாண்டம் செய்யும் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு முதல் மனைவி மல்லிகா, 2-வது மனைவி சசிகலா ஆகியோர் இருக்கின்றனர். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகில் அர்ஜூனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அர்ஜுனனை […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் ஒரு நிர்பயா”… டெல்லியில் நடந்தது போல்… மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த சம்பவம் போலவே மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” மேலும் சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொலை வழக்கில் தேடிவந்த மேலும் 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ஆம் தேதி அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொல்லை கொடுக்கான்” பெயிண்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வளையக்கார வீதி பகுதியில் சேகரின் மகன் மதன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய  பெரியம்மா மகனான மகேஸ்வரனுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மஞ்சு என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து மகேஷ்வரன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்துள்ளார். அதன்பின் உறவினர் வீடு […]

Categories
மாநில செய்திகள்

ம.ஜ.க நிர்வாகி கொடூர கொலை…. என்ன காரணம்?…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுபற்றி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குழியில் 150 நாய்கள்… ஈவு, இரக்கமின்றி… உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூரம்…!!!

சிவமொக்கா என்ற வனப்பகுதியின் அருகில் 150 நாய்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கம்பதாளா-ஒசூர் அருகே உள்ள தம்மடிஹள்ளி என்ற கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் இருந்தது. இது கிராமத்திற்குள் யாராவது புதிதாக வந்தால் குரைப்பது வழக்கம். நாய் குறைத்தால் யாரோ புதிதாக கிராமத்திற்குள் வருகிறார்கள் என்று தெரிந்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்மடிஹள்ளி கிராமத்தில் மைசூரு காகிதத் தொழிற்சாலைக்கு வெளியூரைச் சேர்ந்த பெண்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி காளிக்கவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் பேசிக்கொண்டிருந்த 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட தரல” மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருக்கின்றான். இவர் கூலி வேலை பார்த்து வருகின்றார். இதில் சந்தன குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனகராணி  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த கொலை…. சிக்கி கொண்ட வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கொலை வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு நாணல்காடு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு இசக்கி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முறப்பநாடு பக்க பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

கை, காலை வெட்டி, பிளேடால் முகத்தை கிழித்து… கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்…. காதலன் கூறிய காரணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளம் பெண்ணின் கை கால்கள் துண்டிக்கப்பட்டு, பிளேடால் முகம் முழுவதும் கிழித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து இந்த கொடூர கொலை சம்பவம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருக்கு…. மாட்டி கொண்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

விவசாயி கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்துக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடையவரை  விரைவாக பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்படி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்னப்பாப்பா என்ற மனைவியும், சக்திவேல் நாகராஜன் என்ற 2 மகன்களும்இருந்துள்ளனர். இதில் முருகன் பன்றிகளை வளர்த்து வருகின்றார். இவருடைய மகன் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிகின்றார். இதனையடுத்து 2-வது மகன் நாகராஜன் விபத்தில் தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்ன பாப்பாவுக்கும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் சூரப்பள்ளி-பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியிலுள்ள புதரில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜலகண்டாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் இருந்ததனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சம்பள பாக்கியை கேக்குறான்” விவசாயியின் கொடூர செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…….!!

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை விவசாயி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் சித்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்தாளபுரத்தில் விவசாயி முருகேசனிடம் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சித்தப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவர் நெய்தாளபுரம் வனப்பகுதி சாலையோரத்தில் கடந்த 28-ம் தேதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்- மகளை குத்து கொலை செய்த அண்ணன்…. சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குண்டூர் அருகே சொத்து தகராறு காரணமாக தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கும் இவரது பெரியம்மா பத்மாவதி என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு அதேபோல் சொத்து பிரச்சனை காரணமாக பெரியம்மா பத்மாவதி வீட்டிற்கு சென்று சீனிவாசராவ் சண்டைபோட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“என் தங்கையை காதலிக்கக் கூடாது”… மறுப்பு தெரிவித்த நண்பன்… பார்ட்டிக்கு அழைத்து பழி தீர்த்த சகோதரன்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலகல் தாலுகா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. பிறகு மறுநாள் காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டத்து பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நீ என் மகளை காதலிக்க கூடாது”…. ஆத்திரத்தில் காதலியின் கண் முன்னே… காதலன் செய்த வெறிச்செயல்…!!!

தன் மகளை காதலிக்க கூடாது என்று காதலியின் தந்தை கண்டித்ததால் வாலிபர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா என்ற பகுதியில் வசித்து வருபவர் நாகப்பா. அதே பகுதியில் வசித்துவரும் நரேஷ் என்பவர் மெஸ்காம் வளாகத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், நரேஷ்க்கும், நாகப்பாவுக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இருப்பினும் நரேசும், நாகப்பாவின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் நாகப்பாவுக்கு தெரிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் ரஞ்சித்குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் லிபினா ஸ்ரீ என்ற மகளும் உள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அடிக்கடி சத்யா தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி ரஞ்சித்குமார் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி கொடூர கொலை… “இறந்த தாயின் உடலுடன் இரவு முழுக்க தனியாக தவித்த மகள்”… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி என்ற நகரில் வசித்து வரும் வினிதா என்கின்ற கர்ப்பிணி பெண் தனது கணவர், 6 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பெண்ணின் கணவர் வெளியூர் சென்றுவிட்டார். மாமியார் ஒரு செவிலியர், அவர் இரவு பணிக்காக அன்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் கர்ப்பிணியான வினிதாவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பல்செட்டுக்காக… 6 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்….!!!

ஒரு பல் செட்டுகாக 6 வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் கோர்டி காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனது 6 வயது மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். புகாரின் பெயரில் மாயமான அந்த சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு பள்ளத்தில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் கை கால்களை கட்டி, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே என்ன ஒரு கொடூரம்..! பெற்ற பிள்ளையை அடித்தே கொன்ற தாய்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சேவல் சரியாக சண்டை போடாததால் ஏற்பட்ட விபரீதம்…. தந்தை மகன் வெறிச்செயல்…..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவில் அகமத் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். அவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றார். மேலும் சண்டைக் கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். அதன்படி சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ என்பவரிடம் சண்டை கோழியை வாங்கியுள்ளார். அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயப் போட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3ஆவதாகவும் பெண் குழந்தை….. தாய் பாலுக்கு பதில் எருக்கம் பால்….. கைதான பாட்டி….!!!

பிறந்து ஏழு நாட்களான பெண் குழந்தையை பெற்ற தாயை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல், தேன்மொழி என்ற தம்பதிகளுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேன்மொழி மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். மூன்றாவது ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அவர்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். குழந்தை பிறந்த அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

பணம் கேட்டு டார்ச்சர் செய்த மகன்… நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

பணம் கேட்டு டார்ச்ச்ர் செய்த மகனை அவரது தந்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன்(72). இவரது மகன் கிரண்(32).  லட்சுமணனுக்கும், கிரணுக்கும் பணப்பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் கிரண், லட்சுமணனிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த லட்சுமணன் வனவிலங்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பாடம் படிக்காததால்… 3 1/2 வயது மகன் கொலை… வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் சோக முடிவு…!!!

ஆன்லைனில் மகன் பாடம் படிக்காத காரணத்தினால் மகனை கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா என்ற பகுதியை சேர்ந்த சாகர் பாட்டக், சிக்கா என்ற தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ரிதான். அவரை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த பெற்றோர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்தனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாய்… ஆத்திரத்தில் மகள் செய்த கொடூர சம்பவம்…!!!!

மும்பை மாவட்டம், ஐரோலி என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தனது மகளை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மகளை சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு டாக்டருக்கு படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை. இதை அவர் பெற்றோரிடம் தெரிவித்த போதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சிறுமி செல்போனில் […]

Categories
தேசிய செய்திகள்

“தாலியை விற்று கணவனை கொல்ல பணம் கொடுத்த மனைவி”… கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவன் கூறிய பதில் […]

Categories
மாநில செய்திகள்

30 வருஷ பழக்கம்…. 70 வயதில் காதல் விபரீதம்… கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கரூர் அருகே பொன்னுசாமி என்பவரும், அவரது மனைவி பழனியம்மாளும் வசித்து வருகின்றனர். பழனியம்மாளுக்கு 55 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மணி என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருமாதம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பழனியம்மாவிடம் பேசுவதற்காக, அதிகாலை  4 மணிக்கு மணி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பேச மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த மணி, அங்கு இருந்த அரிவாளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

SHOCKING: குடிகார கும்பலால் நடந்த விபரீதம்…. கொல்லப்பட்ட மருத்துவ மாணவர்கள்…. சிதைக்கப்பட்ட கனவு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக் கேட்டதால் குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலமாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி கலங்க வைத்துள்ளது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிரிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர். கொரோனா காரணமாக சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…சாலை ஓரம் வாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை… வைரல் வீடியோ…!!!

ஆட்டோ  ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த கடைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே, சாலையோரமாக […]

Categories
தேசிய செய்திகள்

“46 குரங்குகள் விஷம் வைத்து கொலை”… பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் 46 குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் ஒரு கோணிப்பையில் குரங்குகளை கொலை செய்து அதனை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த அனைத்து குரங்குகளையும் மீட்டனர். அதில் மயக்க நிலையில் இருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமிருந்த 46 குரங்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்…!!!

கள்ளத்தொடர்புக்கு பெற்ற குழந்தை இடையூறாக இருந்ததால் தாயே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை அருகே அபர்ணா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியூரில் இருப்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் […]

Categories
உலக செய்திகள்

2 மாத பச்சிளம் குழந்தை… பிரபல நாட்டில் நடந்த சோகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

பிரித்தானியாவில் இரண்டு மாத குழந்தை பெண் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் Ardoyne எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு இரண்டு மாத பச்சிளம் குழந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பாவக்கதைகள் படம் போல” கர்ப்பிணி மகளை…. கொடூரமாக கொன்ற தந்தை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் ராம்பிரசாத். இவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய 18 வயது மகள் வேறு சாதியைச் சேர்ந்த காதலனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்பிரசாத் தன்னுடைய மகளை பழிவாங்க திட்டம் தீட்டி இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் சென்ற பிறகு தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து சென்ற ராம்பிரசாத் பாவக்கதைகள் திரைப்படம் போல தன்னுடைய மகளை வீட்டிற்கு சமாதானம் செய்து அழைத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மது குடித்துவிட்டு அடித்தார்” கணவருக்கு நேர்ந்த கொடூர செயல்…. திருவாரூரில் பரபரப்பு….!!

கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமான நிலையில் கடந்த 19-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்வெட்டியால் தாக்கிய வாலிபர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோள் அப்பட்டுவிள பகுதியில் ரங்கசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறத. இதில் ரங்கசாமிக்கு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கா இப்படி பண்ணிட்டாரு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக முதியவரை கடப்பாரையால் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மைக்செட், பாத்திரங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவரும் கார் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்”… கடன்கொடுத்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… சிசிடிவியால் சிக்கிய தம்பதிகள்…!!!

டெல்லியில் வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த மூதாட்டி கவிதா. இவருக்கு 72 வயது ஆகிறது. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் அனில் ஆர்யா மற்றும் தனு ஆர்யா என்ற தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார். இதை சென்ற மாதம் 30ஆம் தேதி திருப்பி கேட்டுள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…. பின் நடந்த சம்பவம்….!!

கோவை அருகில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது மனைவி கலாமணியுடன் கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் வ.உ.சி. வீதியில் வசித்து வந்துள்ளனர். இதில் பாண்டியராஜன் அங்கு இருக்கக்கூடிய ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தரல…. தாய்மாமாவுக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

செலவுக்கு பணம் கொடுக்காததால் மருமகனே தாய் மாமாவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் சாந்தன் செட்டிவிளை பெரியநாடார் தெருவில் சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தாசில்தாராக இருந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய மகள் நாமக்கலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். ஆகவே வீட்டில் சிவதாணு, அவருடைய தங்கை மகன் விக்னேஷ் ராம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் விக்னேஷ் ராமுக்கு இன்னும் திருமணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் திருமணம் செய்து வைக்கல…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயகிபுரத்தில் பாலு என்பவர் கொத்தனாராக வசித்து வருகின்றார். இவருக்கு 3 மனைவிகள் இருக்கின்றனர். இதில் முதல் மனைவி வசந்தாவுக்கு சஞ்சய்காந்தி, புயல் ராஜன் என்ற 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சலி தேவிக்கு ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்ற 2 மகன்களும், 3-வது மனைவி ரஷ்யாவுக்கு சிந்துஜா என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தனிக் குடும்பமாக வசித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேண்டாம் என்று கூறியதால் குத்தி கொலை… சேலத்தில் பயங்கரம்…!!!

சேலத்தில் வசித்து வரும் சித்ரா என்ற பெண் கணவனை இழந்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர் அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது ஆரம்பம் முதலே சித்ராவின் மகளுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் மகள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கியதால், ஏழுமலையை தங்களது வீட்டிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சித்ரா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு…. வசமா சிக்கிய7 நபர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் 7 நபர்களை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினி பாண்டியனை கடந்த 9-ஆம் தேதி இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவனை எதுக்கு அழைத்து வந்த…. ஆட்டோ டிரைவர்க்கு நடந்த கொடூரம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

ஆட்டோ டிரைவர் சரமாரியாக கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருந்து கொத்தள சாலை கொடிமரத்து பகுதியில் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசியல் பிரமுகரின் கொலை வழக்கு…. போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம்…. 3 பேரிடம் விசாரணை….!!

அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியில் தெற்கு மாவட்டச் செயலாளராக ரஜினிபாண்டி இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினிபாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING:தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி கொலை…. பரபரப்பு….!!!

அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் படுகொலை…. பெரும் பரபரப்பு….!!!!

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனெல் மோய்ஸ் தனது வீட்டில் வைத்து மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி மார்டின் மோய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை சதியில் 26 கொலம்பியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது பிரதமர் ஜோசப் இடைக்கால அதிபராக பொறுப்பேற்று உள்ளார்.

Categories

Tech |