கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ இரக்கம் என்ற மகன் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் லிங்கநாடார் என்பவரின் மகளான கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் தேவ இரக்கம் கனகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]
