மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஞான சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை முதலிவாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிட்டாதார்குளம் பகுதியில் டேவிட் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதலிவாக்கத்தில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் ஞான சேவியர் மளிகை கடையை டேவிட் […]
