இளைஞரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்ழனி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து […]
