சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறை தாக்கியதில் இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுவனேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது […]
