ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவியின் தந்தையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சார்லஸ் ஜான்- செலின் ரோஸி. சார்லஸ் ஜான் அப்பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செலின் ரோஸி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெங்களூரில் வசித்து […]
