கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]
