நேற்று கொலம்பியா அதிபர் பயணித்த ஹெலிகாப்டரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொலம்பியாவின் தலைநகரான போகோடாவிலிருந்து வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோகட்டா நகருக்கு அந்நாட்டின் அதிபர் இவான் டியூக் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது உள்துறை மந்திரி, நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர், ராணுவ மந்திரி உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் கோகட்டா நகரில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்தில் ஹெலிகாப்டரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து ஆறு முறை […]
