Categories
உலக செய்திகள்

“அவங்க மாஸ்க் கூட போடல”…. கொரோனாவுக்கு இலக்கான ராணியார்…. ஊடகங்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

நெதர்லாந்து அரண்மனை வட்டாரங்கள் கொரோனா தொற்றால் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து அரசரின் தாயார் பீட்ரிக்ஸிடம் ( வயது 83 ) கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அரண்மனை வட்டாரங்களும் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை அன்று பட்டத்து இளவரசி அமலியா 18 வயதை எட்ட உள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணியார் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கொரோனா…. வெளியான தகவல்…!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை ஏழு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “நான்கு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆப் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு….. ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேலும் ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான்  வகைகள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை மகாராஷ்டிரா சுகாதார துறை அறிவித்துள்ளது.  இன்று பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய மூன்று பேர் வெளிநாட்டில் சுற்றுலா சென்று வந்த உடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஆசிரியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும்  திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலமான திருவனந்தபுரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் இத்தனை மாகாணங்களில் பரவி விட்டதா!”…? அதிகரித்த ஒமிக்ரான்…!!

அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக  கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம்…. பிரபல நாட்டில் அதிகரித்த ஓமிக்ரான்…. பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததையடுத்து அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த தொற்று மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் மீண்டும்…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!

தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் இருந்ததாவது “அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, ஒமிக்ரான் அச்சுறுத்தலினால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து முக்கிய ஹாட்ஸ்பாட்களை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை INSACOG ஆய்வகத்திற்கு விரைவாக அனுப்ப வேண்டும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள்….. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி.!!

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தடை விதித்துள்ளார். கொரோனாவை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது.. ஆனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. அதில் குறிப்பாக மதுரை மிகவும் மோசமாக உள்ளது.. அதாவது, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முதல் டோஸ் 71% பேரும் இரண்டாம் டோஸ்  32% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.. மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறன் கொண்ட தடுப்பூசி!”…. வெளியான தகவல்…!!

மாடர்னா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் இரண்டாம் தவணை ஐந்து மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாடர்னா தடுப்பூசி, 87% கொரோனா தொற்றை தடுக்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தை எதிர்த்து 95% பாதுகாப்பு அளிப்பதாகவும், உயிரிழப்பை 98% தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 3,52,878 நபர்களுடன், தடுப்பூசி செலுத்தாத, அதே எண்ணிக்கையுடைய மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

குழம்பவேண்டாம்…. டெங்குவுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இல்லை….!!!!

டெங்கு நோய்க்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என ஒன்றிய மருத்துவத்துறை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. குளிர்கால கூட்டத் தொடரின்போது, மாநிலங்களவையில் நாட்டில் டெங்கு பரவுவது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சகம், நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 12 நாடுகளில் இருந்து வந்த…. 6 பேருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஸ்க் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா இல்லை….  மத்திய அமைச்சர் தகவல்….!!!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. கவர்னரின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அம்மாவட்டத்தின் கவர்னர் அங்கு பேரழிவு அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் ஒரே நாளில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா சுமார் 6,295 பேருக்கு உறுதியாகியுள்ளது. அதோடு மட்டுமின்றி ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் நியூயார்க் மாவட்டத்தின் கவர்னர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நியூயார்க் மாவட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்க….! அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு…. நிபுணர்களின் எச்சரிக்கை….!!

சுவிஸ் ஜனாதிபதி அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் அதிபர் கை பார்மெலின் அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அதிகாரிகள் பலரும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசும் நடவடிக்கைகளை எடுப்பதில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஜனாதிபதி கை பார்மெலின் மாநில […]

Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்…. இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு….!!

தென்னாப்பிரிக்க நாட்டில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்ததையடுத்து இங்கிலாந்து தங்கள் நாட்டிற்குள் மிகவும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்தது தொடர்பாக விஞ்ஞானிகள் அந்நாட்டிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். ஆகையினால் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் மிகவும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 6 முக்கிய நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்ததோடு மட்டுமின்றி அப்பகுதிகளில் இருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைய பொதுமக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிதலில் மாற்றமா…? இது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

முககவசம் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கனடா நாட்டில் குளிர் அதிகமான நிலையில் மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் கனேடிய மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இதுவரை மக்களிடம் முககவசம் அணியுங்கள் என்று மட்டுமே கூறி வந்த நிலையில் தற்போது நீங்கள் கொரோனாவிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு எந்தவகை மாஸ்க் அணிகிறீர்கள் என்பதை கவனித்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தும் துணியாலான முககவசம் உங்களையும் மற்றவர்களையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கிறதா என்பதை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி…. பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு….!!

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 2 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற மேலும் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.எஸ் சைத்யா கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 2 தவணை தடுப்பூசி…. உலகளவில் 330 கோடி மக்கள்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இதுவரையிலும் 330 கோடி நபர்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு 2 தவணையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி நபர்கள் செலுத்திக் கொண்டிருப்பதாகவும், இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 42.2 சதவீதம் என தினசரி கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” இந்த நாடுகளுக்கு செல்ல கூடாது…. தடை விதித்த அமெரிக்கா….!!

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்குமே கொரோனா கால பயணத்தில் 4-ம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாய நிலையில் உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா….11 மாணவர்களுக்கு பாதிப்பு…. பள்ளியை மூட உத்தரவு ….!!

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் 1- 8 […]

Categories
சினிமா

கொரோனாவால் பிரபல நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகை மாதவி கோகடே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 58. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் இந்தி, மராத்தி திரைப்படங்கள் மற்றும் ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா!!

அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”. என்று பதிவிட்டுள்ளார்.. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. […]

Categories
மாநில செய்திகள்

நீங்க கட்டாயம் போடனும்…. “விருப்பம் இல்லையா”… வீட்டுல இருங்க… ஐகோர்ட் அதிரடி!!

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.. இந்த நிலையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா- முழு ஊரடங்கு…. முடியல…..!!!

உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக…. பிரபல நாட்டில் கொரோனாவால் பதிவாகாத இறப்பு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி எந்த ஒரு நபரும் மடியவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்னர் தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு நபரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கா..? கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் 2-வது முறையாக ரத்து… நிபுணர்கள் எச்சரிக்கை..!!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரண்டாவது முறையாக ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தற்போது நாட்டின் நிலை அபாய கட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!”.. இராணுவத்தை களமிறக்க முடிவு..!!

ஜெர்மன் அரசு, நாட்டில் கொரோனோ பரவல் தீவிரமாகி வருவதால், ராணுவத்தை களமிறக்க தீர்மானித்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனாத் தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து, ஒரே நாளில் அதிக கொரோனா பரவியது கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா பரவலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் கூட்டமைப்பினுடைய தலைவராக இருக்கும் Marburger Bund என்பவர் கூறுகையில், வரும் நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும். எனவே, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 8- ம் கட்ட தடுப்பூசி முகாம்…. மொத்தம் 600 மையங்கள்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் ஏற்கனவே 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 8-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 […]

Categories
உலக செய்திகள்

பார்சல் வாங்கிய பொதுமக்கள்…. கொரோனா பரவும் அபாயம்…. எச்சரிக்கை விடுத்த அரசாங்கம்….!!

சீனா இணையத்தின் வாயிலாக குழந்தைகளின் துணிகளை ஆர்டர் செய்து பார்சல் மூலம் பெற்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவில் ஹெபேய் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் குழந்தைகளது ஆடையை நெய்யும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களில் 3 நபர்களுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் ஹெபேய் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் ஆடையை நெய்யும் தொழிற்சாலையிலிருந்து இணையத்தின் மூலம் குழந்தைகள் துணியை ஆர்டர் செய்து அதனை பார்சல் […]

Categories
உலக செய்திகள்

வருடந்தோறும் பூஸ்டர் தடுப்பூசியா…? ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை…. பைசர் நிர்வாகியின் முக்கிய தகவல்….!!

பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார். பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆனால் பைசர் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா  நோய்த்தொற்று தொடர்பான பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேற, உலக நாடுகள் தடுப்பூசி திட்டங்களை முழுவீச்சில் அமுல்படுத்தி வருகின்றது. இதில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

ஈரானில் ஒரே நாளில் 8,000க்கும் மேலான உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக உயர்ந்துள்ளது. ஈரான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 8,000ரத்திற்கும் மேலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஈரான் நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,551 ஆக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வீரமணி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதையடுத்து அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்தது கவலையளிக்கிறது. இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 60 பேருக்கா..? முதியோர் இல்லத்தில் அபாயம்… அதிகாரிகளின் தீவிர விசாரணை..!!

சுவிட்சர்லாந்தில் சுமார் 60 பேர் முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள Oberriet என்ற பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 25 ஊழியர்களுக்கும், 43 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தரப்பில் இந்த கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைக்கவும், புதிதாக கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது…. சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியில் தகவல்….!!

கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்து நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா உட்பட பல நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கர்ப்பகால ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றின் போது சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்த செய்தியாளர்…. மரண படுக்கைக்கு தள்ளப்பட்ட கொடூரம்….!!

சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளரான சாங் சாம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றை கையாளுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சாங் சாம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான மாத்திரைக்கு இங்கிலாந்து அனுமதி.. வெளியான தகவல்..!!

கொரோனாவை கட்டுப்படுத்த மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சுமார் 221 நாடுகளில் பரவி கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனாவை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகளும் உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், சுமார் 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 நபர்கள். இந்நிலையில், மெர்க் என்ற […]

Categories
உலக செய்திகள்

படப்பிடிப்புக்கு சென்ற நடிகர்…. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…. தனிமையில் ஜேசன் மொமொவா….!!

“கேம் ஆஃ ப் திரோன்ஸ்” தொடரில் நடித்த ஜேசன் மொமொவாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் புகழ்பெற்ற சினிமா தொடர்களில் கேம் ஆஃ ப் திரோன்ஸ் ஒன்றாகும். இந்த தொடரில் ஜேசன் மொமொவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோன்று அகுவாமென், ஸ்வீட் கெல் உட்பட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜேசன் மொமொவா நடித்துள்ளார். இதனிடையில் நடிகரான ஜேசன் மொமொவா “அகுவாமென் அண்ட் தி லாஸ் ஆஃ ப் கிங்டம்” படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டு கொண்ட இந்தியர்கள்…. ஓமனுக்கு பயணம் செய்யலாம்…. இந்திய தூதரகத்தின் அறிவிப்பு….!!

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு பயணம் செய்யலாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எந்தெந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் அந்நாட்டிற்கு வரலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது “இந்தியாவில் கோவேக்சின் என்ற தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஓமன் நாட்டிற்கு வரும் போது தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம்போல் […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் 1-ம் தேதி முதல்…. கட்டுப்பாட்டில் தளர்வு…. ஆஸ்திரேலிய சுகாதார மந்திரியின் தகவல்….!!

நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டுப்பாட்டில் தளர்வு காரணமாக ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணயச் சட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாட்டிற்கு போவதை கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நவம்பர் 1-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு… “உங்கள் கையில் தான் இருக்கிறது”… டெட்ரோஸ் அதானோம் வருத்தம்..!!

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது மக்கள் கைகளில் உள்ளது என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார் .. பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, கொரோனா வைரஸை  ஒழிப்பதற்கான ஆயுதங்கள் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், ஆனால் மக்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பயனளிக்கக்கூடிய பொது சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகள், திறமையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பிரபல ஆட்சியருக்கு கொரோனா…. மாவட்ட மக்கள் சோகம்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை கொரோனாவில் இருந்து மீட்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். இவரது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்ட மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“நீங்கதான் தடுப்பூசியில் மாபெரும் சக்தி” உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா…. அதிகாரியின் பேச்சு….!!

தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா உடனான அமெரிக்காவின் பணி மக்களின் உயிர்களை காப்பாற்றுகிறது. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகமானது அந்நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து இருக்கிறது. இதனுடைய தலைமை செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்து 26-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை டேவிட் மார்சிக் ஒப்புக்கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளா…? 26-ம் தேதி முதல் நடைமுறை…. சிங்கப்பூர் அரசு அறிவிப்பு….!!

கொரோனா விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை சிங்கப்பூர் அரசு  அறிவித்து உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடுமையான விதிமுறைகளை விதித்து இருந்தது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்து இருக்கிறது. இதனால் அந்நாட்டு அரசு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

2 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. ஐரோப்பிய நாட்டின் அதிரடி முடிவு….!!

ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு பரவிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பை தடுக்கும் பொருட்டு சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் ருமேனிய அரசாங்கம் இரவு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி… மத்திய அரசு தான் முடிவு எடுக்கும்… ராதாகிருஷ்ணன் பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 6ஆவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மெகா முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனிடையே இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி சான்றிதழ்” இனி இவர்களுக்கு மட்டும்தான்…. பிரித்தானியாவில் வெளியான தகவல்….!!

பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் விரைவில் 3 டோஸ் போடும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. ஆகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கலாம். இது மிகுந்த ஆபத்தையும், மோசமான விளைவையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் துடித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் தினங்களில் 3 டோஸ்களையும் செலுத்தினால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும்…. தடுப்பூசி பணிகள் தீவிரம்…. கேட்டுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு….!!

சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என  உலக சுகாதார அமைப்பு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை உலகம் முழுவதிலும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியதாவது “ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும் அவற்றின் பணியாளர்களாக இருக்கின்றனர். மேலும் நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சார்ந்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

257 தினங்களில் 100 கோடி தடுப்பூசிகள்…. உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த சர்ப்ரைஸ்… பெருமிதம் கொண்ட பிரதமர் மோடி….!!!

கொரோனாவிற்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஆகும். கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக உலகரங்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் உலக சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொண்டதால்… “எதையும் தாங்கும் சக்தி இந்தியாவிற்கு வந்துள்ளது”… பிரதமர் மோடி…!!!

கொரோனாவை எதிர் கொண்டதால் இந்தியாவிற்கு எந்த துயரத்தையும் தாங்கும் சக்தி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா நேற்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று நாம் புதிய சாதனையை படைத்துள்ளோம். இந்தியா 247 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டியுள்ளது. இதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே காரணம். அதற்கு நாட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த சர்ச்சை… கொரோனா தடுப்பூசியால் விவேக் இறக்கவில்லை…. மத்திய ஆய்வுக்குழு தகவல்!!

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்ட பிறகு இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகத்தை பொருத்தமட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது. நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி மட்டுமே காரணம் இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை விளக்கமளித்த நிலையில், தற்போது மத்திய அரசின் […]

Categories

Tech |