Categories
உலக செய்திகள்

OMICRON : “யாருமே தப்பிக்க முடியாது”…. உலக நாடுகளுக்கு WHO சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

உலக நாடுகள் புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரசிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நிபுணர்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அடிப்படையில் முன்பு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. எதிர்த்து இறங்கிய மருந்து நிறுவனம்…. வெளியான தகவல்…..!!!!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரான் தப்பி விடும் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் பிரபல பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளன. இதனை அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் உலகாளவிய மக்கள் தொடர்பு நிர்வாகி பிளேவியா கார்சியா செய்தி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று”…. மீண்டும் ஊரடங்கு அமல்…. பிரபல நாட்டில் வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சீனா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டில் உள்ள சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மறு அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி “3 மாதங்களில்”…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா…. அதிபர் பைடனுடன் தொடர்பு…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தொற்று குறைந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி”… 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு…. சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு அபாயங்களை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இந்த குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் பயோஎன்டெக் கொரோனா  தடுப்பூசியின் குறைக்கப்பட்ட டோஸ் போடுவதற்கு ஐரோப்பிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேரி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே நான்கு மாணவர்களுக்குகொரோனா  உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் 2 மாணவர்களுக்கு தோற்று உறுதியாகி உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு கொரோனா…. பள்ளி மூடல் – பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மற்றும் சமயபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளியை சேர்ந்த 9 மாணவர்களுக்கும், அரசு உயர்நிலை பள்ளி மாணவிக்கும் கொரோனா உறுதியானதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை […]

Categories
உலக செய்திகள்

“அதிகரித்த ஒமிக்ரான் பரவல்!”…. மீண்டும் ஊரடங்கு….? பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!

இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சமீப நாட்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பும் அங்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே முதல் தடவையாக அந்நாட்டில் தான் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அங்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த, […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு எதிரொலி!”….. பரிசோதனை மையங்களில் குவிந்த வாகனங்கள்…… நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்….!!

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நிலையத்தில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில், தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு, மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. எனவே, மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க் மற்றும் மியாமி நகர்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான் வைரஸ்…. மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை…!!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இந்த வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கி கூறினர். […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலை பாதிக்குமா?…. ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் தகவலின்படி ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவும் என்று தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின் படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸை விட 20 லிருந்து 40 மடங்கு குறைவாக இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் 10,000 […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: டிச-31 வரை கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த வகை வைரஸ் தொற்று மஹாராஷ்டிரா மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த அடிப்படையில் இதுவரை 32 பேர் இந்த வைரசுக்கு எதிராக பாசிட்டிவ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், மும்பை மாநகரம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… மாநிலம் முழுவதும் மீண்டும்?…. அரசுக்கு பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் கர்நாடக மாநில அரசுக்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒரு முக்கிய வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2-வது மறுஆய்வு கூட்டத்திற்குப் பின் வருடாந்திர சோதனை நேர்மறை விகிதம் (WTPR) 5 சதவீதத்துக்கும் மேல் சென்றால் மட்டுமே மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிப்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகர் விக்ரமுக்கு கொரோனா!!

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம். நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், விக்ரமுக்கும் ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!

நியூசிலாந்து அரசு 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் உட்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணை பைசர் தடுப்பூசியளிக்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே நற்செய்தி….! “கொரோனாவை ஒழிக்க வந்துவிட்டது”…. அதிபர் உற்சாக வரவேற்பு….!!

கொரோனாவின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பினை குறைப்பதற்காக மாத்திரைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக இது அமையும் என்று பாராட்டியுள்ளார். மேலும் மாத்திரைகளை சந்தைப்படுத்துவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் காலகட்டம் என்பதால் பைசர் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தவில்லையா….? இனிமேல் பணி நீக்கம் தான்…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

கூகுள் நிறுவனம் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி ஆல்ஃபாபெட் என்ற கூகுளின் தாய் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், “பணியாளர்கள் தங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்குரிய மருத்துவ ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், மத அடிப்படையிலான விதிவிலக்கு கேட்க விரும்புபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக காண்பிக்க வேண்டும். இதுதவிர […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. “ஒமிக்ரான் வைரஸ்”…. இனிதான் ஆட்டம் ஆரம்பம்…. WHO தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!

தற்போது 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளை தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 61 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. 2 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகைகளின் போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

மக்களே நிம்மதி செய்தி… இனி ஊரடங்கு தேவையா?…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போதைக்கு தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தலைவரான Gerald Gass கூறியபோது “மக்கள் பொது இடங்களில் கூடுவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் வரவேற்கப்படுகிறது. இதனையடுத்து ஜெர்மன் மருத்துவமனைகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே….! மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. யாருக்கெல்லாம் தெரியுமா?… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று ஒன்றரை ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அடுத்த அவதாரம் எடுத்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் […]

Categories
உலக செய்திகள்

“அடடா அருமை!”…. கொரோனாவை ஒழிக்க புதிதாக 4 மருந்துகள்….. சுவிட்சர்லாந்தின் சூப்பர் திட்டம்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றை எதிர்த்து செயல்படக்கூடிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிராக 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த புது மருந்துகள் அடுத்த வருட கடைசியில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்களுக்கான, செலவு சுமார் $ 29.2 மில்லியன் ஆகும். கொரோனா பாதிப்பால் உண்டாகும் அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காகவும், நோயின் தீவிரத்தை குறைப்பதற்காகவும் இந்த மருந்துகளை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதில், 2 மருந்துகள் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளுக்குரியது. இவற்றில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா யாரையும் விட்டுவைக்காது.”…. கடிதம் எழுதிவிட்டு மருத்துவர் செய்த கொடூர செயல்…. ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் தனது குடும்பத்தினரை கொடூரமாக கொலைசெய்த மருத்துவர் பிணமாக மீட்கப்பட்ட அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தடயவியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுசில் சிங்(55), இவருடைய மனைவி சந்திரபிரபா (50), இவருக்கு சிகார் சிங்க் என்ற மகனும் குஷி சிங் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 3-ம் தேதி சுஷில் சிங் தனது மனைவிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து மயங்கிய பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா?… வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!!

ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து டெல்லி முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்தியாவிலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! “ஒமிக்ரான் வைரஸ்” மிக பெரிய அளவில் இருக்கும்…. பீதியை ஏற்படுத்தும் இங்கிலாந்து பிரதமர்….!!!

ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியபோது ” ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் இது […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. இன்னும் 10 நாட்களில் தெரியும்…. ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ஒமிக்ரான் வைரசை கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரசை ஸ்புட்னிக்–வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாஸ்கோவில் உள்ள அந்நாட்டின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரிசோதனை”…. ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு உறுதி…. வெளியான அறிக்கை….!!!

தென்னாப்பிரிக்காவில் ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் ஜனாதிபதியின் அறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராமபோசா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார். இந்த நிலையில் ராமபோசா ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சீனாவை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மூலமாக சீன அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் டெல்டா உள்ளிட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் சமீபகாலமாக மீண்டும் சீனாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனாவால் 84 […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி…. அரசு அனுமதி…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கியது. இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை உலகநாடுகள் முடக்கி விட்டன. இந்த நிலையில் அமெரிக்கா, கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி” 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மஹாராஷ்டிரா மாநிலமான புனே, மும்பை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தொற்று குறைந்து வந்ததை அடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தினால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : உருமாறிய கொரோனா…. வழிகாட்டுதலை பின்பற்ற உத்தரவு….!!!

உருமாறிய கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது.  இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உருமாறிய கொரோனாவை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மக்களுக்காக அரசின் இலவச திட்டம்…. அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா பூலே ஜன் அரோக்ய யோஜன என்கின்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்கிய போது, MJPJAY என்ற திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கடந்த மே மாதம் 1ஆம் தேதி 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. இனி அபராதம் தான்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   உலக அளவில் கிட்டத்தட்ட 54 நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தொற்று பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 21 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று எப்போது முடியும்….? கோடீஸ்வரர் பில்கேட்ஸ் கணிப்பு….!!

கொரோனா பரவலுக்கான கடுமையான நிலை, வரும் 2020 வருடத்திற்குள் முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் கணித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தன் இணையதள பக்கத்தில் கொரோனா நிலை தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். அதில், கொரோனா பரவலின் நிலை குறித்து, ஒரு கணிப்பை குறிப்பிடுவது என்பது முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், கொரோனா பரவலின் கடுமையான நிலை அடுத்த வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் வாழ்க்கையிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பெருந்தொற்று”… மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்…. கடும் எச்சரிக்கை…!!!!

கொரோனா உள்ளிட்ட சவால்களால் தீவிர மனநலப் பிரச்சனையை இளம் தலைமுறையினர் சந்திப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினர் தீவிர மனநலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விவேக் மூர்த்தி பேசியதாவது “கொரோனா காலத்தில் கவலை, மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறைகள், வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூக பிரச்சனைகள் மன […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா….. செம ஷாக்கில் அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும்  மாணவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து தற்போது நேரடி வகுப்புகள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்கும் பிற மாணவர்களும் சோதனை செய்யப்பட்டதில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே […]

Categories
உலக செய்திகள்

“மக்களே சூப்பர் தகவல்”…. கொரோனா தொற்று விரைவில்…. ரஷ்ய நிபுணர் கணிப்பு….!!!!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கமானது விரைவில் முடிவுக்கு வருவதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.   உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் குறித்து ரஷிய தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் பேட்டி அளித்தபோது “மனிதர்கள் மீது வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடி வருகிறது. இதற்கிடையில் தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் பார்த்தால் அதன் உடம்புக்குள் சென்று தங்கி இருக்கும். அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவில் மீண்டும்…. தடுப்பூசி போடலன்னா பொது இடங்களுக்கு தடை…. சுகாதாரத் துறை தகவல்….!!!

ஐரோப்பியாவில் மீண்டும் கொரோனா அவதாரம் எடுத்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. ஐரோப்பியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதிலும் சில நாடுகளில் 3-வது அலை மற்றும் 4-வது அலையும் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் சமீபத்தில் ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும் என கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

வரும் 12-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா?…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து அமலில் உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு பதில் கூறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா நிலவரம்” இதோ மொத்த லிஸ்ட்…. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்….!!

இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 8,439 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 8,439 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையில் ஒரே நாளில் 9,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 93,733 பேர் பாதிக்கப்பட்டு மருவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் குணமடைந்தோர் சதவீதம் 98.36 […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… தனியார் ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் புதிய வகை கொரோனா அபாயத்தை அடுத்து அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடிவு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா இனி ஒரே ஜாலி தான்…. குஷியில் புதுச்சேரி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ பரவலால் பலரும் உயிரிழந்துள்ளனர். இன்று வரை கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை அரசு மற்றும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 8000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 6 நபர்கள்,காரைக்கால் மற்றும் மாஹோவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா….? நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்து…. இன்றைய ஆலோசனையில் தீர்வு கிடைக்குமா…?

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பரிசீலிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 23 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும்…. விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவின் 3-வது அலையானது இந்தியாவில் எப்போது உச்சத்தை அடையும் என்பது தொடர்பாக மனிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்து 2 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஒமிக்ரான் வைரஸ் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது இது உச்சத்தை அடையும் என்றும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா […]

Categories
உலக செய்திகள்

மக்களே…”சூப்பர் தகவல்”… கொரோனா பரவலை குறைக்குமாம்?… இதோ புதிய அறிமுகம்….!!!

அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழு உருவாக்கிய சூயிங் கம் தொடர்பான ஆய்வறிக்கையானது ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வாளர் ஹென்றி கூறியதாவது “முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம். இதனையடுத்து அவர்கள் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் நிலையும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சூயிங் கம் உருவாக்கி இருக்கிறோம். கொரோனா தொற்று பொதுவாக மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மீண்டும் பள்ளிகளை மூடும் திட்டம்…. அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கொரோனா தொற்று வருகிறது. அதில் குறிப்பாக சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மக்களே…. இனி தடுப்பூசி போடலனா சட்ட நடவடிக்கை தான்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வெளியே நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை 1,29,028 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 1,26,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையில் 1874 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதத்தை முழுமையாக குறைக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை […]

Categories

Tech |