மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது […]