தஞ்சை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து […]