Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்… பரிசோதனைக்கு பிசிஆர் அவசியம்: ஐசிஎம்ஆர்!

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இஸ்லாமியரிடம் பொருள் வாங்க மாட்டேன்”… மறுத்த நபரை கைது செய்த போலீசார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவரிடம் இருந்து பொருள் வாங்க மறுத்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த கொரோனாவுக்கு சாதி, மதம், இனம் என வேறுபாடெல்லாம் தெரியாது.. அனைத்து மக்களிடமும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இருப்பினும், கொரோனா இந்தியாவில் பரவுவதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற ரீதியில் தொடர்ந்து இங்கு வெறுப்புணர்வுப் பரப்புரை சில நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை… அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை […]

Categories
மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

ஆச்சரியமூட்டும் தகவல்…!! ”தேனீக்களிடம் கொட்டு” கொரோனா வராதா..?

தேனீக்களிடம் கொட்டு வாங்கினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுவது குறித்து ஒரு செய்தி தொகுப்பு பார்க்கலாம். கொரோனா அச்சம் எங்கும் பரவி இருக்கும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பலரும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் யாரும் கேள்விப்பட்டிராத ஒரு மருத்துவ முறை கொரோனவை எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றால் நமக்கு ஆச்சரியம் தான். உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் தேன் பல வழிகளில் நன்மை தரக்கூடியது என்பது நாம் […]

Categories
உலக செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பலன் இல்லை, மரணங்கள் அதிகரிக்கின்றன …!!

கொரோனவை குணப்படுத்துமா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம் அது ஒரு மருந்து. கொரோனா பாதித்த நூற்றுக்கணக்கானோரை வைத்து, அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 368. இதில் உயிர் தப்பிவிடலாம் என்று  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் எண்ணிக்கை 97.  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினுடன் கலந்து சாப்பிடலாம் என்று சாப்பிட்டவர்கள் 113. கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று மேலே […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தலை மீறி… சுவர் ஏறி குதித்து 10க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்… வீடியோவை பார்த்து அதிர்ந்த ஜனாதிபதி!

கென்யாவில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச்சென்ற 10க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா (Uhuru Kenyatta) தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக  […]

Categories
லைப் ஸ்டைல்

கொரோனா வைரஸ் – நீங்களே கண்டுபிடித்து கொள்ளலாம்..!!

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம். ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம்  நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம் – பேராயர் ஜார்ஜ் அந்தோணி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி அறிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2020ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு வாபஸ்!

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வாபஸ் பெற்றது.  இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?: ஏப்.27-ல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 15 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,471 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
சினிமா

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார். இதுதவிர, ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார். அதேபோல, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 133 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று, அஜ்மீரில் 44, ஜெய்ப்பூரில் 66, பரத்பூரில், தயுசா மற்றும் சவாய் மாதோபூரில் தலா 1, ஜோத்பூரில் 3, கோட்டாவில் 6, நாகூரில் 4, டோங்கில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 328 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதேபோல் […]

Categories
லைப் ஸ்டைல்

அலறடிக்கும் கொரோனா… மளிகை பொருட்களை பாதுகாப்பதற்கு டிப்ஸ்..!!

கொரோனா கிருமிகளிடமிருந்து நாம் வாங்கும் மளிகை பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு சில குறிப்புகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும்கொரோனோவால் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமனிதன் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்றவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு சமூக விலகலும் முக்கியமாக கடைபிடித்தாக வேண்டும். ஆனால் வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியே சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வரும்பொழுது […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… கணவருக்கோ கொரோனா… தவிக்கும் மனைவி… கண்கலங்க வைக்கும் சம்பவம்!

பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் வருமானம் இல்லாமல் தவித்து வரும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்  பிரிட்டன் 6ஆவது இடத்தில் இருக்கிறது.  இந்த நிலையில் பிரிட்டன் எஸெக்சை (Essex ) சேர்ந்த 53 வயதான ஜியோவானி சாபியா (giovanni sapia) […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 15,000,00,00,000 ஒதுக்கீடு…! ”கொரோனாவை ஒழிக்க” மத்திய அரசு நடவடிக்கை …!!

கொரோனவை தடுக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வேகமாக பரவி  வரும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ உட்கட்டமைப்ப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 720 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பிரச்சனை என்பது இத்துடன் முடிந்து விடாது. […]

Categories
அரசியல்

கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது: ஸ்டாலின் ஆவேசம்..!

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கோரிக்கை…! ”சிக்ஸர் அடித்த எடப்பாடி” இனிமேல் இலவசம் தான் …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தமிழக அரசு பல்வேறு முன்மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

அள்ளிக்கொடுத்து…!! ”மெர்சலான விஜய்” ரசிகர்களுக்கும் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும்  உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே உத்தரவு….!! ”ஒட்டுமொத்த மருத்துவர்களும் மகிழ்ச்சி” ஹீரோவான எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணம் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு கடும் போட்டி கொடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தரமான மருத்துவம், சுகாதாரம் நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவிய காலம் முதலே மருத்துவமனைகளை ஆய்வு செய்து, ஆய்வு கூட்டங்கள் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால்… 10 நாடுகளுக்கு பெரும் ஆபத்து… ஐநா எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின்  பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் இருக்கிறது என ஐநா உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக பசியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 135 மில்லியனில் இருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது,  மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

எதிர்கால நலன் கருதி தைரியமாக இருங்கள்: உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அப்படி பேசாதீங்க…! ”நாங்க சொல்லுறத நம்புங்க” சீனா காரணமில்லை ….!!

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி மக்களை மரண அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடூர கொரோனா வைரஸ் சீனா நாட்டின் உகானின் கடல் உணவு சந்தையில் இருந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக உலக நாடுகளால் நம்பப்படுகின்றது.ஏனென்றால் இதான் தாக்கம் முதல் முதலாக அங்கு தான் இருந்தது. ஆனாலும் இந்த சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்று அடையாளம் காணும் பணியில் சீனா இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

விமான போக்குவரத்துத்துறை ஊழியருக்கு கொரோனா உறுதி… பிற ஊழியர்களை சுயதனிமைப்படுத்த வேண்டுகோள்

விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 15ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து இவர் பணியாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து தலைவர் மாளிகை தரப்பில் இதறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நாடாளுமன்ற பணியாளர் ஒருவருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”பிரிட்டன் எடுத்த முடிவு” – உலகமே எதிர்பார்ப்பு …!!

கொரோனா தடுப்பூசியை நாளை முதல் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் முன்னின்று நடத்துகின்றது. இங்கிலாந்து அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில் கொரோனா வைரசை குணப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை வியாழக்கிழமை முதல் மனிதனுக்கு செலுத்தி சோதனை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்து உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல கடந்த வாரம் அதிவேமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் வர வேண்டாம்…. போட்டோ எடுத்து அனுப்புங்க…. அரசின் அதிரடி உத்தரவு ….!!

தொழிற்சாலைகளை மின் அளவீட்டை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை முந்தைய மாதத்தை ஒப்பீட்டு செலுத்தலாம் என்று  தெரிவித்துள்ளனர். இதில் வீடுகளில் உள்ள பயனீட்டாளர்களுக்கு செலுத்திய மின்கட்டணம் அதிகமாக இருந்தால் வரக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு புது சிக்கல்…!! எல்லாத்துக்கும் சீனா தான் காரணம் …..!!

சீனா அனுப்பிய தரமற்ற ரேபிட் கிட்டுகளினால் இந்தியாவுக்கு புது சிக்கல் எழுந்துள்ளது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொடூரத்தை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவ்டிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்ற்றது. நாட்டிலே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையி கொண்ட நாடான இந்தியா கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மிக கவனமாக கையாண்டு வருகின்றது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க…. 600க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் மருந்து கண்டுபிடிக்க முயற்சி..!

சர்வதேச அளவில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வு கூடங்களில் கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது.. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் பல நாடுகளுக்கு பரவி ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசால் பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த கொரோனா வைரசை கூடிய விரைவிலேயே ஒழித்துவிட வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்…! 2,804 பேர் மரணம்… ”8 லட்சத்தை தாண்டி” உருக்குலைந்த USA …!!

கொரோனாவின் ஆதிக்கமாக விளக்கும் அமெரிக்கா நீங்கா துயரில் இருந்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்..  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும்  வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம்  பாதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது… 1.70 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை சர்வதேச அளவில் 1,71,504 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த 6,58,069 பேர் குணமடைந்த நிலையில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் அதன் ஆதிக்கம் தீவிரமடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்”.. கோபத்தோடு சாடிய நடிகர் ராஜ்கிரண்..!!

இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை… இன்று 552 பேருக்கு கொரோனா உறுதி!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியுள்ளது. மொத்தமாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் 250 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 […]

Categories
லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கவனம் தேவை… டிவி மற்றும் செல்போன்…கண்களுக்கு பாதிப்பு..!!

 இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 2,178 ஆக உயர்வு!

குஜராத்தில் இன்று புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,178 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா.. இன்று 19 பேருக்கு புதிதாக தொற்று உறுதி: பினராயி விஜயன்

கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனிப்பான செய்தி… ஒரேநாளில் கரூரில் 48, கோவையில் 31… மொத்தம் 635 பேர் டிஸ்சார்ஜ்… விவரம் இதோ!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைத்தவர்களின் சதவீதம் 17.48% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவிலே முதலிடம்…! ”அடிச்சு தூக்கி மாஸ்” காட்டிய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்ட்டவரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையியும் அதிகரித்து வந்ததால் நாடுமுழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குவ கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 572 பேர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா… 178 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 3  நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

ஆதாரம் இருக்கா… கொரோனாவை மனிதனால் உருவாக்க முடியாது… விளக்கமளித்த சீனா!

கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என்று சீனா விளக்கமளித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வரும் இந்த கொரோனா வைரஸை சீனா தான் பரப்பிது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.. இதனிடையே வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வுக்கூடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று புதிதாக 1,329 பேருக்கு கொரோனா… 600-ஐ தாண்டிய உயிரிழப்புகள்!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: கொரோனா பாதிப்பு : 25 லட்சத்தை தாண்டியது ….!!

உலகளவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரம் படி உலகம் முழுவதும் 2,500,993 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…! ”சீனாவால் வந்த வினை” ICMR தகவலால் பகீர் …!!

ரேபிட் டெஸ்ட் கிட்களால் இந்தியாவின் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ… தல தோனி எங்கே?…குழப்பத்தில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – நவீன் பட்நாயக் அறிவிப்பு!

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்தால் கொரோனா பாதிக்கும் என அச்சப்படும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சம்பவர் அரங்கேறி வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என […]

Categories

Tech |