ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]