கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது […]
