கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதுதொடர்பான வதந்திகளை சமாளிப்பது என மத்திய மாநில அரசு பேரும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. பொதுமக்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி தொடர்ச்சியாக தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் தான் இந்த மாதிரியான […]
