இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை நீக்கியுள்ளது. […]
