சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் என்.கே. அரோரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஓமைக்ரான் வைரஸின் பிஎஃப் 7 திரிபு 15 சதவீதம் பாதிப்புகளுக்கு காரணம். அதன் பிறகு 50 சதவீத பாதிப்புகள் பிஎன், பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை. அதன் பிறகு […]
