தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு […]
