ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் ரேஷன் கடையில் அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சமயத்தில் ஜான்சன் பேட்டை ரேஷன் கடையில் நிவாரண நிதியை வாங்குவதற்காக 300 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கடைக்கு முன் குவிந்துள்ளனர். […]
