மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை […]
